உள்ளூர் செய்திகள்
மொடக்குறிச்சி அருகே விபத்தில் மூதாட்டி பலி
விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மொடக்குறிச்சி:
விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மொடக்குறிச்சி காந்திஜி வீதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது தாய் செல்லம்மாள் (55).
இந்நிலையில் நேற்று செல்லமாளுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து செல்லமாள் தனது பேரனுடன் மருத்துவ மனைக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மொடக்குறிச்சி ஊஞ்சபாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென்று செல்லம்மாளின் சேலை மொபட்டின் சக்கரத்தில் சிக்கி கொண்டது.
இதனால் 2 பேரும் நிலைதடுமாறி ரோட்டில் விழுந்ததில் செல்லம்மாளுக்கு தலையில் பலத்த அடிபட்டது.
உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இரவு செல்லம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.