உள்ளூர் செய்திகள்
ஓசூரில் பரபரப்பு டிப்பர் லாரி மோதிய விபத்தில் பஸ்-4 கார்கள் சேதம் தப்பியோடிய லாரி டிரைவருக்கு போலீசார் வலை வீச்சு
டிப்பர் லாரி மோதிய விபத்தில் பஸ்&4 கார்கள் சேதமானது. தப்பியோடிய லாரி டிரைவருக்கு போலீசார் வலை வீச்சு தேடி வருகிறார்கள்.
ஒசூர்:
ஓசூர் சிப்காட் 2-ல் இயங்கி வரும் தனியார் கம்பெனியில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட பேருந்து, நேற்று மாலை கிருஷ்ணகிரி&ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சீதாராம் மேடு அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி அதிவேகமாக லாரியை ஒட்டி வந்து வலதுபுறமாக திரும்பினார். இதில் பேருந்தின் இடது புறம் சேதம் அடைந்தது.
இதையடுத்து டிப்பர் லாரி டிரைவர் ஹேண்ட் பிரேக் போடாததால், லாரி பின்புறமாக சென்று, பின்னால் வந்து கொண்டிருந்த 4 கார்கள் மீது மோதியது. மேலும் பேருந்தின் மீது மீண்டும் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது.
இதனால் நான்கு கார்களும், பேருந்தும் சேதம் அடைந்தது மட்டுமன்றி பேருந்தில் இருந்த 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து பேருந்து ஒட்டுனர் முத்து அளித்த புகாரின் பேரில், ஓசூர் அட்கோ போலீசார் வழக்குபதிவு செய்து, டிப்பர் லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.