உள்ளூர் செய்திகள்
வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணி நடந்த போது எடுத்தப்படம்.

வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

Published On 2022-02-13 15:33 IST   |   Update On 2022-02-13 15:33:00 IST
ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளச்சித் தேர்தலையொட்டி மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று தொடங்கியது.
ஈரோடு, பிப்:

ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளச்சித் தேர்தலையொட்டி மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று தொடங்கியது.

ஈரோடு மாவட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தலில், ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள், 4 நகராட்சியில் 102 வார்டுகள், 42 பேரூராட்சிகளில் 630 வார்டுகள் என 792 வார்டுகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு வரும், 19-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக, 1,251 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சியில் ஒருவர், பேரூராட்சிகளில் 20 பேர் என 21 பேர் போட்டியின்றி தேர்வாகி 771 வார்டுகளுக்கு மட்டும் 1,221 ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் நடக்கிறது. இருப்பினும், 1,251 ஓட்டுப்பதிவு எந்திரம் (இ.வி.எம்.) அவற்றுடன் இணைக்க 2,502 கட்டுப்பாட்டு கருவிகள் தயார் நிலையில் உள்ளன.
இக்கருவிகள் கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைய இணையதளத்தில் இந்த எந்திரங்களை சுழற்சி முறையில் தேர்தல் நடத்தும் பகுதிக்கு தேர்வு செய்து வைத்துள்ளனர்.

இன்று கருங்கல் பாளையம் காமராஜர் பள்ளியில் உள்ள வாக்குப் பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. இதனை ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் பார்வையிட்டார்.
அடுத்த 2 நாட்களில் இ.வி.எம்.களில் பொருத்தும் பணி நடக்க உள்ளது. அவற்றை பொருத்திய பின் அரசியல் கட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.

Similar News