உள்ளூர் செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடை விடுமுறை
நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடை விடுமுறை அளிக்கப்படுவதாக டாஸ்மாக் மேலாளர் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு:
நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடை விடுமுறை அளிக்கப்படுவதாக டாஸ்மாக் மேலாளர் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி என 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் வரும் 19&ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.
தேர்தல் அமைதியான முறையில் நடக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அதன்படி வரும் 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 3 நாட்களுக்கும், ஓட்டு எண்ணிக்கை நாளான 22-ந் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடக்கும் பகுதியில் இருந்து 5 கி.மீ. சுற்றளவுக்குள் வரும் 179 டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் வரும் 17-ந் தேதி காலை 10 மணி முதல் 19-ந் தேதி இரவு 12 மணி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுபோல, ஓட்டு எண்ணிக்கை நடக்கும் வரும் 22-ந் தேதி அன்றும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் பகுதியில் இருந்து, 5 கி.மீ., சுற்றளவுக்குள் வரும் 57 டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை பின்பற்றி மதுபான கடைகள், மதுக்கூடங்களை மூட வேண்டும்.
அதனை மீறி விற்பனை நடந்தால், கடை பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.