உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

ஈரோடு மாநகராட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 13 புகார்கள்

Published On 2022-02-13 14:43 IST   |   Update On 2022-02-13 14:43:00 IST
நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஈரோடு மாநகராட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 13 புகார்கள் வந்துள்ளதாக கட்டுப்பாட்டு அறை பணியாளர்கள் தெரிவித்தனர்.
ஈரோடு:

நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஈரோடு மாநகராட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 13 புகார்கள் வந்துள்ளதாக கட்டுப்பாட்டு அறை பணியாளர்கள் தெரிவித்தனர்.

ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில் ஒரு வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு ள்ளதால் 59 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 
 
தற்போது தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் வார்டு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இது ஒருபுறமிருக்க வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப் படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

நகராட்சி தேர்தலில் முறைகேடுகளை தடுக்க பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்கல், தேர்தல் விதி மீறி அதிகமான பணம், இடம் விட்டு இடம் மாறுதல் போன்ற புகார்களை தெரிவிக்க மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும், ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 13 புகார்கள் வந்துள்ளது. அளவுக்கு அதிகமான இரைச் சலுடன் மேளதாளத்துடன்  செல்வது, கூட்டம் கூட்டமாக ஓட்டு கேட்டு செல்வது, அனுமதி இல்லாமல் டிஜிட்டல் பேனர் வைப்பது போன்ற புகார்களே இதுவரை வந்துள்ளது. 

இதன் அடிப்படையில் பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவை சரி செய்யப்பட்டு வருகிறது. இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என தேர்தல் கட்டுப்பாட்டு அறை பணியாளர்கள் கூறினர்.

Similar News