உள்ளூர் செய்திகள்
கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் போராட்டம் 3-வது நாளாக நீடிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் போராட்டம் இன்று 3-வது நாளாக நீடித்து வருகிறது.
புஞ்சை புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டத்தில் கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் போராட்டம் இன்று 3-வது நாளாக நீடித்து வருகிறது.
ஈரோடு, சென்னிமலை, சத்தியமங்கலம் மற்றும் புஞ்சை புளியம்பட்டி, பவானிசாகர் உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான கைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வருகிறார்கள்.
மேலும் ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உற்பத்தியாளர்கள் பலர் கைத்தறியில் பட்டு சேலைகள் உற்பத்தி செய்து வருகிறார்கள்.
அவர்கள் பெங்களூரு மற்றும் சீனாவில் இருந்து பட்டு நூல் மற்றும் கச்சா பொருட்களை கொள்முதல் செய்து வருகிறார்கள். இதன் மூலம் பட்டு சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பட்டு நூல் மற்றும் கச்சாப் பொருட் கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கைத்தறி பட்டு உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் பட்டு சேலைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. நூல் விலையை குறைக்க மத்திய அரசு மற்றும் ஜவுளி அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் நாமக்கல் மாவடங்களில் கடந்த 10-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.
இன்று 3-வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் வரும் 20-ந் தேதி வரை நடக்கிறது. இதனால் தொழிலாளர்கள் பலர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.