உள்ளூர் செய்திகள்
504 மையங்களில் தடுப்பூசி முகாம் தொடங்கியது
ஈரோடு மாவட்டத்தில் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 504 மையங்களில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 504 மையங்களில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் இன்று 22-வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி நடந்து வருகிறது.
அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என 504 மையங்களில் இன்று காலை 9 மணிக்கு மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது.
1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.
இந்த முகாமில் மாவட் டம் முழுவதும் 2016 பணியாளர்கள், 66 வாக னங்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
18 வயது நிரம்பிய இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் இந்த முகாமினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர் களுக்கும், 60 வயது உடைய இணை நோயுடைய முதியவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள்.