உள்ளூர் செய்திகள்
கொண்டையம்பாளையம் ஊராட்சியில் உள்ள ரேசன் கடையில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.

ரேசன் கடை-அரசு மருத்துவமனையில் கலெக்டர் கிருஷ்ணணுண்ணி ஆய்வு

Published On 2022-02-11 15:01 IST   |   Update On 2022-02-11 15:01:00 IST
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை மற்றும் ரேசன் கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
டி.என்.பாளையம்:

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை மற்றும் ரேசன் கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
 
கள்ளிப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவ மனையில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று டாக்டர் மற்றும் செவிலியரிடம் மருத்துவமனைக்கு வரும் வெளிநோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள், காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
 
தொடர்ந்து கொண்டையம்பாளையம் ஊராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் ரேசன் கடையில் ஆய்வு மேற்கொண்டு குடும்ப அட்டைதார்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மகளிர் உழவன் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் இயற்கை முறையில் தயாரிக்கபட்டு வரும் பொருட்கள் குறித்து மகளிரிடம் கேட்டறிந்து அவர்களை ஊக்குவித்தார். 

இதனை தொடர்ந்து கொண்டையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குட்டையூர் இரட்டை பள்ளம் ஏரியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் குறித்து ஊராட்சி அலுவலர் களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Similar News