உள்ளூர் செய்திகள்
தீயில் எரிந்து சேதமடைந்த பா.ஜனதா நிர்வாகி கார்.

நாகை அருகே பா.ஜனதா நிர்வாகி காருக்கு தீ வைத்து எரிப்பு

Published On 2022-02-10 14:25 IST   |   Update On 2022-02-10 14:25:00 IST
நாகை அருகே பாரதிய ஜனதா நிர்வாகி காரை தீ வைத்து எரித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருப்பூண்டியை சேர்ந்தவர் புவனேஸ்வர்ராம். இவர் பா.ஜனதா இளைஞரணி மாவட்ட துணைத்தலைவராக இருந்து வருகிறார். இவர் தனது வீட்டுக்கு முன்பு உள்ள செட்டில் தனது புதிய காரை நிறுத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு புவனேஸ்வர்ராமின் காருக்கு மர்மநபர்கள் தீவைத்து விட்டு சென்று விட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சக்திகுமார் என்பவரது தந்தை குஞ்சையன் இதனை பார்த்து உடனடியாக வீட்டிற்குள் சென்று தகவல் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த புவனேஸ்வர்ராம் மற்றும் அவரது குடும்பத்தினர் ஓடிவந்து தண்ணீர் ஊற்றி கார் முழுவதும் எரிவதற்குள் தீயை அணைத்தனர். இதில் காரின் இடதுபக்க கதவு மற்றும் டயர் எரிந்து சேதமானது.

இதுகுறித்து கீழையூர் போலீசில் புவனேஸ்வர்ராம் புகார் அளித்ததன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் மர்மநபர்கள் பெட்ரோலை கார் மீது ஊற்றி தீவைத்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக காருக்கு தீ வைக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? எனவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News