உள்ளூர் செய்திகள்
ஆரணியில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி
ஆரணி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வடுகசாத்து சேர்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (45) விவசாயி.
இவருக்கு மங்கலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
தன்னுடைய சொந்த நிலத்தில் வேலையை முடித்து மின் மோட்டார் பீஸ் கேரியரை எடுக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ஏழுமலை சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.