உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் புதிதாக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டியில் குழாய்கள் திருட்டு
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் புதிதாக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டியில் குழாய்கள் திருடு போனது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பக்தர்கள் வசதிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டது.
குபேரலிங்கம் பகுதியில் 2 இடங்களில் சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் பைப் லைன் அமைத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் தங்களுக்கு தேவையான குடிநீரை பிடித்து வந்தனர்.
இந்த நிலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி இணைப்பில் உள்ள குடிநீர் குழாய்கள் திருடப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் அமைக்கப்பட்ட 8குடி நீர்நிலைகளும் திருடப்பட்டு விட்டதால் அங்கு பக்தர்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பல லட்சம் செலவு செய்து அமைக்கப்படும் இதுபோன்ற குடிநீர் குழாய்கள் சரியாக பராமரிக்கப் படாமலும், பாதுகாக்க படாமலும் பயனளிகாமல் போய்விடுகிறது.
எனவே எந்த திட்ட பணிகளை மேற்கொண் டாலும் அவைகளை தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கைகள் அவ்வப்போது எடுக்கப்பட வேண்டும்.
இல்லையேல் இது போன்ற நிலைமைதான் ஏற்படும் என்று பக்தர்கள் கூறுகின்றனர். திறக்கப்பட்ட 2 மாதத்தில் இப்படி பயன்படாமல் சென்று விடுவதால் யாருக்கும் நன்மை இல்லை என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
மேலும் இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய குடிநீர் குழாய்கள் அமைத்து அவைகளைப் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.