உள்ளூர் செய்திகள்
கவுந்தப்பாடி கிருஷ்ணாபுரம் மக்கள் தேர்தலை புறக்கணித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

Published On 2022-02-09 15:17 IST   |   Update On 2022-02-09 15:17:00 IST
கவுந்தப்பாடி அருகே கிருஷ்ணாபுரம் காலனி பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
கவுந்தப்பாடி:

கவுந்தப்பாடி அருகே கிருஷ்ணாபுரம் காலனி பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சி 9-வது வார்டுக் குட்பட்ட கிருஷ்ணாபுரம் காலனி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். 

அவர்களுக்கு 1988-ம் ஆண்டு பட்டா வழங்கப் பட்டது. அப்போது சுமார் 8 சென்ட் நிலம் அம்பேத்கர் வாசக சாலைக்காக ஒதுக் கப்பட்டதாக  கூறப்படுகிறது. வாசக சாலைக்கு வழங்கப் பட்ட இடத்தை  சிலர் ஆகிரமித்து பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது.  

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற  கோரி  கிருஷ்ணாபுரம் காலனி பொதுமக்கள் ஏற் கனவே பல முறை போராட் டங்கள் நடத்தி வந்தனர். ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றப் படவில்லை என பொதுமக்கள் கூறினர்.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அம்பேத்கர் வாசக சாலைக்கு இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி  பேரூராட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக  கடந்த 1-ந் தேதி கலெக்டர், ஆர்.டி.ஓ. மற்றும் தாசில்தார், செயல் அலுவலரிடம் மக்கள் மனு கொடுத்தனர்.

இந்த நிலையில் கோரிக்கைகள் வலியுறுத்தி கிருஷ்ணாபுரம் காலனி பகுதியில் கடந்த சில தினங் களுக்கு முன்பு  அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. மேலும் தேர்தலை புறக்கணிப்போம் என இந்தப் பகுதியில் விளம்பர  பதாகை  வைக்கப் பட்டது.

தகவல் அறிந்டது சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறையினர் விளம்பர பதாகையை அகற்றினர்.

இந்த நிலையில் மீண்டும் இப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிப்போம் என அந்த பகுதியில்  விளம்பர பலகை எழுதி வைத்துள்ளார்கள். 
இது குறித்து மக்கள் கூறும் போது, இதுவரை எங்களிடம் அரசு அதிகாரிகள் எந்த பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. எங்கள் கோரிக்கை எதையும் ஏற்க வில்லை. 

எனவே வருகிற பேரூராட்சி தேர்தலை புறக்கணித்து பொதுமக்கள் அனைவரும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்றனர்.

Similar News