உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

திருவண்ணாமலையில் ரேசன் கடை பணியாளர்கள் போராட்டம்

Published On 2022-02-09 14:58 IST   |   Update On 2022-02-09 14:58:00 IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் ரேசன் கடை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:

தமிழக அரசு ஊழியர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவித்து வழங்கி உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர் களுக்கு 14 சதவீத அகவிலைப்படி உயர்வு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 17 சதவீத அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பாரபட்ச நடவடிக்கைக்கு எதிர்ப்பு தொ¤வித்து தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் பணியாளர்கள் சிறு விடுப்பு எடுத்து நியாயவிலைக் கடைகளை மூடி தங்கள் எதிர்ப்பை தொ¤வித்தனர். 

இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திலும் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ரேசன் கடை ஊழியர்கள் நேற்று விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 1,627 ரேசன் கடைகளில் 1,573 ரேசன் கடைகள் செயல்படவில்லை. 

இந்த போராட்டம் தொடர்பாக திருவண்ணாமலையில் தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.சி .சேகர், மாவட்டச் செயலாளர் சண்முகம்,  மாவட்ட பொருளாளர் ஜெய்சங்கர் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-

தமிழக அரசு ஊழியர்களுக்கு 31 சதவீதம் அகவிலைப்படி அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ரேசன் கடை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய 17 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். 

இது கொரோனா பெருந்தொற்று காலத்திலும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய பணியாளர்கள் மனதை வேதனை அடைய செய்துள்ளது.  

எனவே இதற்கு கண்டனம் தொ¤விக்கும் வகையில் நேற்று தமிழகம் முழுவதும் ரேசன் கடை பணியாளர்கள் சிறு விடுப்பு  எடுத்து எங்கள் எதிர்ப்பை தொ¤வித்து வருகிறோம். 

எங்களுக்கு 31 சதவீத அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க முன் வராவிட்டால் சங்கத்தின் வழிகாட்டுதல்படி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News