உள்ளூர் செய்திகள்
வாக்குசாவடி ஊழியர்களுக்கு நாளை 2-ம் கட்ட பயிற்சி
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி ஊழியர்களுக்கு நாளை 2-ம் கட்ட பயிற்சி நடக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி ஊழியர்களுக்கு நாளை 2-ம் கட்ட பயிற்சி நடக்கிறது.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் வருகின்ற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்குசாவடியில் பணியாற்ற உள்ள ஊழியர்களுக்கு முதல் கட்ட பயிற்சி கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக ஈரோடு மாநகராட்சியில் 443 வாக்குசாவடி மையங்கள், 4 நகராட்சிகளில் 153 வாக்குசாவடி மையங்கள், 42பேரூராட்சிகளில் 655 வாக்குசாவடி மையங்கள் என மொத்தம் 1251 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குபதிவு நாளில் வாக்குசாவடி மையங்களில் 6 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். இதில் மாநகர் பகுதியில் 443 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி நாளை ஈரோடு ரங்கம்பாளையத்தில் ஆர்.என்.எம். கல்லூரி மற்றும் அதே பகுதியில் உள்ள கொங்கு மெட்ரி குலேஷன் பள்ளி என 2 இடங்களில் நடை பெறுகிறது.
இதேபோல் பவானி நகராட்சியில் தேர்தல் பணிக்கு ஈடுபடும் ஊழியர் களுக்கு விஜயலட்சுமி கல்யாண மண்டபத்திலும், கோபிசெட்டி பாளையத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வைரவிழா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், சத்தியமங்கலத்தில் நகராட்சித் தேர்தலில் ஈடுபடும் ஊழியர்களுக்கான பயிற்சி ஸ்ரீராகவேந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி யிலும், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பஞ்சாயத்து பள்ளியிலும் பயிற்சி நடைபெற உள்ளது.
இதேப்போல் 42 பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அந்தந்த பள்ளிகள், கல்லூரிகளில் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் மாவட்டம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதில் வாக்குப்பதிவின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், வாக்காளர்களை ஒழுங்கு படுத்துதல், மின்னணு வாக்குபதிவுவை எப்படி கையாள்வது? மின்னணு வாக்குப்பதிவு பழுது ஏற்பட்டால் அதை எவ்வாறு சரி செய்வது போன்றவை குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சி பங்கேற்கும் ஊழியர்களில் கொரோனா 2-ம் தவணை தடுப்பூசி போட்டு 9 மாதங்களுக்கு மேல் ஆனவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. 3-ம் கட்ட பயிற்சி வரும் 18&ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.