உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.16 அடியாக சரிவு

Published On 2022-02-09 14:44 IST   |   Update On 2022-02-09 14:44:00 IST
மழைப்பொழிவு குறைந்ததால் பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது.
ஈரோடு, பிப்:

மழைப்பொழிவு குறைந்ததால் பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது.

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணையின்  மூலம் 2 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. நீலகிரி மலைப்பகுதி பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக உள்ளது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு அணையில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.  இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.16 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 342 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று மேலும் குறைந்துள்ளது.

அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 1000 கனஅடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடியும் என மொத்தம் 3 ஆயிரத்து 400 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Similar News