உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல் கொள்முதல் முறைகேட்டினை தடுக்க ஆலை அதிபர்களுக்கு போலீசார் விளக்கம்

Published On 2022-02-09 14:21 IST   |   Update On 2022-02-09 14:21:00 IST
நெல் கொள்முதல் முறைகேட்டினை தடுக்க வாகனங்களில் நெல் ஏற்றி வரும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலை அதிபர்களுக்கு போலீசார் விளக்கம் அளித்தனர்.
நெல் கொள்முதல் முறைகேட்டினை தடுக்க ஆலை அதிபர்களுக்கு போலீசார் விளக்கம்

ஈரோடு:

நெல் கொள்முதல் முறைகேட்டினை தடுக்க வாகனங்களில் நெல் ஏற்றி வரும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலை அதிபர்களுக்கு போலீசார் விளக்கம் அளித்தனர்.

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுதுறை அலுவலகத்தில் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுடனான கலந்தாலோசனை கூட்டம்  நடந்தது. கூட்டத்திற்கு குடிமைபொருள் வழங்கல் குற்றபுலனாய்வுதுறை இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசினார். 
அப்போது அவர் கூறியதாவது:-

இந்த கூட்டத்தில் நெல்கொள்முதல் செய்வதில் சில வியாபாரிகள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு, விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்க சென்னை ஐகோர்டு வழிகாட்டுதல் பேரில், அரசு கூடுதல் முதன்மை செயலர் நசிமுதீன் புதிய விதிமுறைகளை விதித்துள்ளார்.
அதன்படி நெல்கொள்முதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைப்பது சம்மந்தமாகவும் மற்றும் உரிமம் பெற்ற வணிகர்களுக்கு வியாபாரம் செய்வது சம்மந்தமாகவும் ஈரோடு மாவட்ட எல்லைக்கு உட்பட்ட இடங்களுக்கு வாகனங்களில் கொண்டு வரும்போது, நெல் விற்பனை செய்தவர் பெயர், முகவரி, டின் நம்பர், அதற்கான பில் ரசீது, தொலைபேசி எண், இ-மெயில் முகவரியும், 

அதேபோல், நெல்லினை வாங்குபவரின் பெயர், முகவரி, ஆலை முகவரி, டின் நம்பர், ஆணை படிவம், தொலைபேசி எண், இ-மெயில் முகவரி, நெல் ரகம், எத்தனை டன், எவ்வளவு மூட்டை, எங்கு கொள்முதல் செய்தது, அதற்கான தேதி மற்றும் வாகன பதிவு எண், வாகன என்ஜின், சேஸ் எண், வாகன உரிமையாளர் பெயர், டிரைவர் பெயர், வாகனம் புறப்பட்ட இடம், தேதி, நேரம், சேரும் இடம், நாள், மொத்த தூரம் (கி.மீ), வழித்தடங்கள் போன்ற விவரங்கள் வாகனங்களில் இருக்க வேண்டும்.

இந்த விவரங்களை, குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தணிக்கை செய்யும் போது கட்டாயம் சமர்பிக்க வேண்டும். 

இந்த ஆவணங்கள் இல்லா விட்டால் வாகனங்களின் மீதும் அதனை பெறும் வியாபாரிகள், விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் .
இவ்வாறு அவர் கூறினார்.

Similar News