உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,673 ஆக குறைந்தது

Published On 2022-02-08 14:11 IST   |   Update On 2022-02-08 14:11:00 IST
ஈரோட்டில் மேலும் 288 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,673 ஆக குறைந்தது.
ஈரோடு:

ஈரோட்டில் மேலும் 288 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,673 ஆக குறைந்தது.

ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்தால் கொரோனா தாக்கம் 3&ம் அலை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. தினமும் புதிய உச்சத்தைத் தொட்டு வந்தது.

இதனை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. 

இதேபோல் தொடர்ந்து மாவட்டத்தில் குணமடைந் தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 288 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 928 ஆக உயர்ந்துள்ளது. 

ஒரே நாளில் பாதிப்பிலிருந்து 1052 பேர் குணமடைந்துள்ளனர். 

இதுவரை குணமடைந் தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து 526 ஆக உயர்ந்துள்ளது.  

மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 729 பேர் உயிரிழந்து உள்ளனர். 

தற்போது மாவட்டம் முழுவதும் 5, 673 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News