உள்ளூர் செய்திகள்
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று தேர்தல் கண்காணிப்பு பார்வையாளர் ஆய்வு
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று தேர்தல் கண்காணிப்பு பார்வையாளர் நிஷாந்த் கிருஷ்ணா ஆய்வு செய்தார்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று தேர்தல் கண்காணிப்பு பார்வையாளர் நிஷாந்த் கிருஷ்ணா ஆய்வு செய்தார்.
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஈரோடு மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் மொத்தம் 490 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 22 பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. நேற்று 115 பேர் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
51&வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் போட்டி யின்றி தேர்வு செய்யப் பட்டார். இதையடுத்து 59 வார்டுகளில் நடைபெறும் கவுன்சிலர் தேர்தலில் 352 பேர் போட்டியிடுகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தின் தேர்தல் கண்காணிப்பு பார்வையாளராக நிய மிக்கப்பட்டுள்ள நிஷாந்த் கிருஷ்ணா இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத் திற்கு வந்தார். ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமாரை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட் டார்.
பின்னர் அங்கு உள்ள கேபிள் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று பார்வையிட்டார். எத்தனை பேர் பணியில் ஈடுபடுகின்றனர். இதுவரை எத்தனை போன் கால் வந்துள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார். பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியலை அவர் பார்வையிட்டார்.
அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக சின்னத்தை கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர். அந்த கடிதங்களை ஆய்வு செய்து பார்த்தார்.
இதே போல் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் போட்டியிடுவதற்குரிய 3 சின் னங்களை கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர். அதையும் ஆய்வு செய்தார்.
ஒரே சின்னத்தை 2 வேட்பாளர்கள் கேட்டு இருந்தால் அவர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு பணி நடந்தது.
இது குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கள், பணியாளர்களும் உட னிருந்தனர்.