உள்ளூர் செய்திகள்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.42 அடியாக குறைந்தது
பவானிசாகர் அணையில் தொடர்ந்து நீர் வெளியேற்றம் அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் 97.42 அடியாக குறைந்தது
சத்தியமங்கலம்:
பவானிசாகர் அணையில் தொடர்ந்து நீர் வெளியேற்றம் அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் 97.42 அடியாக குறைந்தது
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் மூலம் 2 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. நீலகிரி மலைப்பகுதி பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக உள்ளது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு அணையில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.42 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,183 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து தடப் பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்காக ஆயிரம் கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும் என மொத்தம் 3 ஆயிரத்து 400 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.