உள்ளூர் செய்திகள்
மாநகராட்சி பகுதியில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடி மையங்களை டி.ஐ.ஜி முத்துசாமி ஆய்வு செய்தார்.

13 பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் டி.ஐ.ஜி முத்துசாமி ஆய்வு

Published On 2022-02-08 13:23 IST   |   Update On 2022-02-08 13:23:00 IST
ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 13 பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் டி.ஐ.ஜி முத்துசாமி ஆய்வு செய்தார்.
ஈரோடு:

ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 13 பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் டி.ஐ.ஜி முத்துசாமி ஆய்வு செய்தார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வரும் 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில்  443 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வளையகார வீதி,  திருநகர் காலனி, காவேரி ரோடு, காமராஜர் நகர், ராஜாஜிபுரம், கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோவில் வீதி, இந்திராபுரம், ஆர்.என் புதூர், ஜவுளி நகர் மற்றும் ராயபாளையம் உள்பட  13  வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமான வாக்குச்சாவடி மையங்களாக  கண்டறியப் பட்டுள்ளன.

இந்த பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில்  கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். அங்கு செய்யப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

இங்கு கூடுதல் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ஆய்வின் போது ஈரோடு  போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Similar News