உள்ளூர் செய்திகள்
சிதம்பரம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
சிதம்பரம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே உள்ள ஆதிவராகநல்லூர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் மகன் இளஞ்சூரியன் 31, இவர் சிதம்பரத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இளஞ்சூரியன் கடந்த 2ஆம் தேதி என்று சி. முட்லூர் ராகவேந்திரா கல்லூரி அருகே விஷம் குடித்து மயக்க நிலையில் கிடந்துள்ளார்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இளஞ்சூரியன் மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 6 தேதி மருத்துவமனையில் இளஞ்சூரியன் உயிரிழந்தார். இது குறித்து அவருடைய மனைவி அனிதா சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரில் தனது கணவர், இளஞ்சூரியன் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி உள்ளதாகவும், வாங்கிய பணத்தை சரியான முறையில் கட்ட தனியார் நிதி நிறுவன ஊழியர்களும், சிலர் வற்புறுத்தி மிரட்டியதாகவும் அதனால் மன உளைச்சல் காரணமாக எனது கணவர் இறந்துள்ளார்.
இதனால் எனது கணவர் , இறந்ததற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியிருந்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கை தற்கொலை தூண்டுதல் வழக்காக மாற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளஞ்சூரியன் உடல் பிரேத பரிசோதனை முடிந்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் உள்ளது.