உள்ளூர் செய்திகள்
லால்பேட்டைபேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை
உள்ளாட்சித் தேர்தல் வருவதையொட்டி லால்பேட்டை பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனைமேற்கொண்டு வருகின்றனர்.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் லால்பேட்டை பேரூராட்சியில் வருகிற 19ம்தேதி வார்டு உறுப்பினருக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. அதையொட்டி பறக்கும் படை அதிகாரி ஆனந்தன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதுபாலன் போலீஸ் ஏட்டு ஆகிய குழுவினர்கள் லால்பேட்டை பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனைமேற்கொண்டு வருகின்றனர்.