உள்ளூர் செய்திகள்
வாக்குப்பதிவு இயந்திரம் (கோப்புப்படம்)

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்- கடலூர் மாவட்டத்தில் 14 இடங்களில் வாக்கு எண்ணிக்கை

Published On 2022-02-07 16:22 IST   |   Update On 2022-02-07 16:22:00 IST
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு கடலூர் மாவட்டத்தில் 14 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் காலியாக உள்ள 447 கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான மொத்தம் 726 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

வாக்குப் பதிவுக்குப் பிறகு மின்னணு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்கவும், வாக்கு எண்ணிக்கைக்கும் 14 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் படி, கடலூர் மாநகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை மையமாக கடலூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி அமைக்கப்பட்டுள்ளது.

நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு டேனிஷ் மி‌ஷன் மேல்நிலைப்பள்ளியும், பண்ருட்டி நகராட்சிக்கு சுப்பராய செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும், சிதம்பரம் நகராட்சிக்கு ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளியும், விருத்தாசலம் நகராட்சிக்கு திரு.கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியும், வடலூர் நகராட்சிக்கு குறிஞ்சிப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், திட்டக்குடி நகராட்சிக்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும் வாக்கு எண்ணும் மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல, அண்ணாமலை நகர் பேரூராட்சிக்கு ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளியும், காட்டுமன்னார் கோயில், லால்பேட்டை பேரூராட்சிகளுக்கு காட்டு மன்னார் கோவிலில் உள்ள பருவதராஜ குருகுல மேல்நிலைப்பள்ளியும், புவனகிரி, பரங்கிப்பேட்டை பேரூராட்சிகளுக்கு புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும், கங்கை கொண்டான், மங்கலம்பேட்டை பேரூராட்சிகளுக்கு மங்கலம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியும், பெண்ணாடம் பேரூராட்சிக்கு திட்டக்குடி அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு பேரூராட்சிகளுக்கு சேத்தியாத்தோப்பு தேவங்குடி கோபால கிருஷ்ணன் மழவராயர் மேல்நிலைப்பள்ளியும், தொரப்பாடி, மேல்பட்டாம் பாக்கம் பேரூராட்சிகளுக்கு புதுப்பேட்டையிலுள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், கிள்ளை பேரூராட்சிக்கு அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியும் வாக்கு எண்ணும் மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Similar News