உள்ளூர் செய்திகள்
மரத்தில் கார் மோதி நின்ற காட்சி.

ரோட்டோர மரத்தில் கார் மோதி பெண் பலி

Published On 2022-02-07 15:18 IST   |   Update On 2022-02-07 15:18:00 IST
பெருந்துறை அருகே இன்று காலை ரோட்டோர மரத்தில் கார் மோதி பெண் பலியானர். 4 பேர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெருந்துறை:

பெருந்துறை அருகே இன்று காலை  ரோட்டோர மரத்தில் கார் மோதி பெண் பலியானர். 4 பேர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பூர் பத்மினி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சண்முக சுந்தரம் (48). இவரது மனைவி விஜயலட்சுமி (44). இவர்கள் குடும்பத்தினர் மேலும் 4 பேருடன் பண்ருட்டி அருகே உறவினர் வீட்டு விசேஷத்துக்கு காரில் சென்றனர். 

பின்னர் அவர்கள் மீண்டும் திருப்பூருக்கு புறப்பட்டனர். கார் இன்று காலை 6 மணி அளவில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பகலாய் ஊர் என்ற பகுதியில் வந்து கொண்டு இருந்தனர. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாருமாறாக ஓடி ரோட்டோரம் இருந்த மரத்தில் பலமாக மோதி நின்றது.

இதில் காரில் இருந்த விஜயலட்சுமி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த விபத்தில் சண்முகசுந்தரம், சுஜாதா(36), சுரேஷ் (45), ஹஸ்வந்தன் (4) ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.

விபத்து பற்றி தெரிய வந்ததும் பெருந்துறை போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சு மூலம் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் பலியான விஜயலட்சுமியின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Similar News