உள்ளூர் செய்திகள்
கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் மேலும் 6,120 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2022-02-06 20:43 IST   |   Update On 2022-02-06 20:43:00 IST
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 9,916 ஆக பதிவாகி இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய தொற்று பாதிப்பு 6,120 ஆக குறைந்துள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,120 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 1,23,537 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

அரசு மருத்துவமனையில் 10 பேரும், தனியார் மருத்துவமனையில் 16 பேரும் என கொரோனா தொற்று பாதிப்புக்கு 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 37,759 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1.21 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
சென்னையில் மட்டும் ஒருநாள் பாதிப்பு 972 ஆக உள்ளது. நேற்று 1,223 ஆக இருந்த பாதிப்பு 972 ஆக குறைந்துள்ளது.

Similar News