உள்ளூர் செய்திகள்
தற்கொலை

திருமணத்துக்கு பணம் சம்பாதிக்க முடியாததால் வட மாநில வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-02-06 10:20 IST   |   Update On 2022-02-06 10:20:00 IST
சென்னிமலை அருகே திருமணத்துக்கு பணம் சம்பாதிக்க முடியாததால் வட மாநில வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை:

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் வினாயக் நாயக் இவரது மனைவி தமயந்தி நாயக் இவர்களது மகன் மனோஜ் நாயக் (வயது 27). மனோஜ் நாயக்கிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அவர்களது உறவு பெண்ணுடன் திருமணம் செய்ய நிச்சயம் நடைபெற்றது.

திருமணத்திற்கு தேவையான பணம் சம்பாதிப்பதற்காக அவர்கள் குடும்பத்துடன் சென்னிமலை அருகே உள்ள ஈங்கூருக்கு வந்து அங்கு ஒரு வாடகை வீட்டில் தங்கி ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் திருமணத்திற்கு தேவையான பணத்தை மனோஜ் நாயக்கால் சம்பாதிக்க முடியவில்லை. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

அவர் தனக்கு திருமணம் நடைபெறாது என்று வேதனையுடன் பெற்றோரிடம் கூறினார். அவரது பெற்றோர் திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்யலாம் கவலைப்படாதே என்று ஆறுதல் கூறி வந்தனர்

இந்த நிலையில் மனோஜ் நாயக்கின் பெற்றோர் இரவு வேலைக்கு சென்று விட்டனர். மன வேதனையில் இருந்த மனோஜ் நாயக் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு கொண்டார்.

வேலை முடிந்து அவரது பெற்றோர் காலையில் வீட்டுக்கு வந்தனர். அப்போது மகன் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News