உள்ளூர் செய்திகள்
தடுப்பூசி செலுத்தி கொண்ட கல்லூரி மாணவி.

ஈரோடு மாவட்டத்தில் 496 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது

Published On 2022-02-05 13:47 IST   |   Update On 2022-02-05 13:47:00 IST
ஈரோடு மாவட்டத்தில் 21-வது கட்டமாக இன்று 496 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் 21-வது கட்டமாக இன்று 496 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 
 
ஈரோடு மாவட்டத்திலும் மாபெரும் தடுப்பூசி முகாம் மூலம் பல லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டு ள்ளனர். இந்நிலையில் இன்று 21-வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என 496 மையங்களில் காலை இந்த மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது. 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.

இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 1988 பணியாளர்கள், 66 வாக னங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதேப்போல் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். குறிப்பாக 2-ம் தவணை தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர். இதேபோல 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இன்று முகாம்களில் போடப்பட்டு வருகிறது.

Similar News