உள்ளூர் செய்திகள்
நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து கலெக்டர்-தேர்தல் பார்வையாளர் ஆலோசனை
ஈரோடு மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து கலெக்டர், தேர்தல் பார்வையாளர் ஆலோசனை மேற்கொண்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து கலெக்டர், தேர்தல் பார்வையாளர் ஆலோசனை மேற்கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை கண் காணிக்க தமிழ்நாடு மாநில தேர்தல்ஆணையத்தால் தேர்தல் பார்வையாளராக நியமனம் செய்யப்பட்ட நிஷாந்த்கிருஷ்ணா கடந்த 3-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளராக பொறுப் பேற்று கொண்டார்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் கிருஷ்ணனுண்ணியுடன் தேர்தல் பார்வையாளர் நிஷாந்த்கிருஷ்ணா மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை விபரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புகார் தெரிவிப்பவர்கள் தேர்தல் பார்வையாளரின் கைபேசி எண் 8807600787-க்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மேலும், தேர்தல் தொடர்பாக புகார் அளிக்க ஏற்கனவே செயல்பட்டு வரும் இலவச தொலைபேசிஎண்கள், மாநகராட்சி- 180042594890, நகராட்சிகள் மற்றும் பேரூரா ட்சிகள்- 18004250424 -க்கும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தெரிவித்துள் ளார்.