உள்ளூர் செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி 5 நாள் தேர்தல் பிரசாரம்

Published On 2022-02-04 06:20 GMT   |   Update On 2022-02-04 06:20 GMT
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சென்னை:

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் போட்டியிட உள்ள அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், ஒவ்வொரு வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

இந்தநிலையில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அவர் பிரசாரம் செய்ய உள்ள இடங்கள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அ.தி.மு.க. சார்பிலும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிட உள்ள வேட்பாளர்களை ஆதரித்து இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான முன்னாள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை கீழ்கண்ட ஊர்களுக்கு சென்று பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

வருகிற 7-ந் தேதி (திங்கள்) காலை 8.30 மணி- சிவகாசி, மதியம் 12.30 மணி- நாகர்கோவில், பிற்பகல் 3 மணி- திருநெல்வேலி, மாலை 5 மணி- தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

8-ந் தேதி (செவ்வாய்):

காலை 9 மணி- மதுரை, 11.30 மணி- திண்டுக்கல், பிற்பகல் 3 மணி- கரூர், மாலை 5.30 மணி- திருச்சி ஆகிய மாநகராட்சிகளில் பிரசாரம் செய்கிறார்.

10-ந் தேதி (வியாழன்):

காலை 9 மணி- வேலூர், மதியம் 12.30 மணி- காஞ்சிபுரம், பிற்பகல் 3.30 மணி- தாம்பரம், மாலை 6 மணி- ஆவடி ஆகிய நகராட்சிகளில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

11-ந்தேதி (வெள்ளி):

காலை 9.30 மணி மற்றும் 11.30 மணி- வடசென்னை, பிற்பகல் 3 மணி- தென் சென்னை, மாலை 5 மணி- சென்னை புறநகர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

14-ந்தேதி (திங்கள்):

காலை 9 மணி- கோவை, 11 மணி- திருப்பூர், பிற்பகல் 3 மணி-ஈரோடு ஆகிய மாநகராட்சிகளில் சூறாவளி பிரசாரம் செய்கிறார்.

Tags:    

Similar News