உள்ளூர் செய்திகள்
காட்டுமன்னார்கோவில் யூனியனுக்குட்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் ராஜினாமா செய்வதாக கூறியதால் பரபரப்பு
காட்டுமன்னார்கோவில் யூனியனுக்குட்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் ராஜினாமா செய்வதாக கூறியதால் அங்கு சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களது கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை என்று திடீரென பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தனர். அதனை தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டது.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் காட்டுமன்னார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் சந்தித்தனர். அப்போது அதிகாரிகள் கூறுகையில் எங்களிடம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதற்கு அதிகாரமில்லை. தாங்கள் மனுவாக கொடுத்தால் அதனை மாவட்ட நிர்வாகத்திற்கும் அனுப்பி வைத்து விடுவோம் என்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் உடனடியாக கூட்ட அரங்கில் ஒன்றாக கூட்டத்தை கூட்டி முடிவுகளை எடுத்துள்ளனர் இதனால் சலசலப்பு உண்டானது. பின்னர் ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டரங்கில் திடீர் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.