உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து முத்தாண்டிகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள தோப்புக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 52). விவசாயி. சம்பவத்தன்று ராமலிங்கம் வீட்டிலிருந்த விஷத்தை எடுத்து குடித்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ராமலிங்கத்தை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ராமலிங்கம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து முத்தாண்டிகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.