உள்ளூர் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் கணினி பட்டா திருத்த முகாம் நாளை நடக்கிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற உள்ளது.
அதன்படி நாளை (2ந்தேதி) காரைக்குடி வட்டத்தில் ஜெயங்கொண்டான் கிராமத்திலும், தேவகோட்டை வட்டத்தில் சிறுகானூர் கிராமத்திலும், திருப்பத்தூர் வட்டத்தில் சிராவயல் கிராமத்திலும், சிங்கம்புணரி வட்டத்தில் மேலவண்ணாரிருப்பு கிராமத்திலும், சிவகங்கை வட்டத்தில் புதுப்பட்டி கிராமத்திலும், மானாமதுரை வட்டத்தில் கட்டிக்குளம் கிராமத்திலும், திருப்புவனம் வட்டத்தில் கானூர் கிராமத்திலும், இளையான்குடி வட்டத்தில் குமாரக்குறிச்சி கிராமத்திலும், காளையார்கோவில் வட்டத்தில் சேதாம்பல் கிராமத்திலும் கணினி பட்டா திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
பொதுமக்கள் மேற்கண்ட கிராமங்களில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன் அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.