உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 64 பேர் வேட்பு மனுத்தாக்கல்

Published On 2022-02-01 13:40 IST   |   Update On 2022-02-01 13:40:00 IST
நகர்புற உள்ளாட்சித்தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 64 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
 ஈரோடு:

நகர்புற உள்ளாட்சித்தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 64 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த, 28-ந் தேதி தொடங்கியது. இதற்காக மாநகராட்சி பகுதியில் 6 இடங்களிலும், நகராட்சி பகுதிகளில் அந்தந்த நகராட்சி அலுவலகங்கள், அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

முதல் நாளில் மனுத்தாக்கல் ஏதும் இல்லை. 29-ந் தேதி நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 2 பேர், பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு ஒருவர் என, 3 பேர் மட்டும் மனுத்தாக்கல் செய்தனர்.

நேற்று மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 3 பேர், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 25 பேர், பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு 33 பேர் என ஒரே நாளில்  61 பேர் மனுத்தாக்கல் செய்தனர். 3 நாட்களில் 64 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் ஈரோடு நகராட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதேப்போல் பா.ஜ.க.வின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. 

இன்றுக்குள் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று முதல் நூற்றுக்கணக்கான மனுக்கள் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இனிவரும் 3 நாட்கள் வேட்புமனு அலுவலகங்களில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் ஆர்வமுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News