உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் இன்று பள்ளி-கல்லூரிகள் திறப்பு
கொரோனா தொற்று குறைய தொடங்கியதால் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்குச் சென்றனர்.
கொரோனா தொற்று குறைய தொடங்கியதால் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்குச் சென்றனர்.
தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியது. குறிப்பாக ஜனவரி மாதம் தொடக்கத்தில் தினசரி பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.
இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. தமிழக அரசு இதை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது.
அதன்படி கடந்த மாதம் 6-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதுபோல் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படு த்தப்பட்டது.
மற்றொரு தடுப்பு நடவடிக்கையாக முதலில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் மீண்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகளில் பங்கேற்று வந்தனர்.
ஈரோடு மாவட்டத்திலும் மாணவ, மாணவிகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வந்தனர். இதேபோல் கல்லூரி களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது தினமும் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது.
இதனையடுத்து மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் அவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் இன்று முதல் நடைபெறும் என அரசு அறிவித்து இருந்தது.
இதையடுத்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை மூலம் பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை பொறுத்த வரை 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 3 லட்சத்து 26 ஆயிரத்து 562 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதுவரை சுழற்சி முறையில் நடந்து வந்த வகுப்புகள் இனி 100 சதவீதம் முழுமையாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று மாணவ- மாணவிகள் காலை முதலே பெற்றோர்களுடன் பள்ளிகளுக்கு உற்சாகமாக வந்தனர். கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு பிறகு தனது நண்பர்களை சந்தித்ததால் மாணவ, மாணவிகள் உற்சாகமடைந்தனர்.
கொரோனா காலகட்டம் என்பதால் அரசு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மாணவ-மாணவிகள் பின்பற்ற வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது.
மாணவ, மாணவிகள் முககவசம் அணிந்து பள்ளிக்கு வந்தனர். முக கவசம் அணியாமல் ஒரு சில மாணவர்களுக்கு பள்ளி சார்பில் முக கவசங்கள் வழங்கப்பட்டன.
பள்ளி நுழைவாயிலில் மாணவர்களின் உடல் வெப்ப நிலையை தெரிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப் பட்டது. இதில் சாதாரண வெப்ப நிலையை தாண்டி கூடுதலாக காண்பிக்கப்பட்ட சில மாணவர்களுக்கு மருத்துவ குழுவினர் உடல்நிலையை பரிசோதனை செய்து அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சை அளித்தனர்.
மேலும் ஒரு சில பள்ளி களில் இன்று பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். மாணவர்கள் உணவருந்தும் போது ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
வகுப்பறையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், கைகளை அடிக்கடி சோப்பு, சனிடைசர் மூலம் சுத்தப்படுத்தும் வகையில் வைக்கப்பட்டு இருந்தது.
அதே சமயம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்படவில்லை. வீட்டு தனிமையில் இருப்ப வர்களும் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்படவில்லை.
இதேபோல் கல்லூரிகளும் இன்று முதல் திறக்கப்பட்டு மாணவ, மாணவிகள் உற்சாகமாக கல்லூரிகளுக்கு வந்தனர்.