உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

குடும்ப தகராறில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-02-01 13:15 IST   |   Update On 2022-02-01 13:15:00 IST
அந்தியூர் அருகே குடும்ப தகராறில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:

அந்தியூர் அருகே குடும்ப தகராறில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 42). இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ராஜேந்திரன் லோடு வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் ராஜேந் திரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்ப டுகிறது. இதன் காரணமாக தனது மனைவியுடன் அவர் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். 

அப்போது ராஜேந்திரன் நான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வேன் என கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல் கணவன்& மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. பின்னர் சோனியா தனது மகன், மகளுடன் கடைக்கு வெளியே சென்றுவிட்டார். 

பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள ஒரு அறையில் ராஜேந்திரன் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சோனியா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜேந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News