உள்ளூர் செய்திகள்
விபத்தில் சிக்கிய லாரியை சிறைப்பிடித்து மறியல்
ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய லாரியை சிறைப்பிடித்து மறியலி ல் ஈடுபட்டனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த மாதனூர் கண்ணாடி குப்பத்தில் நேற்று முன்தினம் இரவில் அதிவேகமாக வந்த ஜல்லி லாரி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மீது மோதியது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் லாரியை சிறை பிடித்து கண்ணாடிகுப்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து அதிகமான காலை மற்றும் மாலை வேளைகளில் ஜல்லி லாரிகள் இயக்கப்படாது என போலீசார் தெரிவித்தனர்.
இதனை ஏற்று மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.