உள்ளூர் செய்திகள்
கிராபைட் ஆலையில் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை
சிவகங்கை கிராபைட் ஆலையில் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கனிமவளத்துறை நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.
சிவகங்கை
சிவகங்கை யூனியன் கோமாளிப்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு கனிம நிறுவன கிராபைட் மேம்பாட்டு ஆலையை கலெக்டர் மதுசூதன் ரெட்டி முன்னிலையில் கனிம வளத்துறை நிர்வாக இயக்குநர் சுவித்ஜெயின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர், கனிம நிறுவன கிராபைட் ஆலையில் கனிம கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன், ஆலையில் கனிம பொடியாக தயாரிக்கப்பட்டு வருவதையும், கனிம பொருட்கள் சுத்திகரிக்கப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டார்.
அவர் கூறுகையில், தற்போது உற்பத்தி திறனுடன் கூடுதலாக உற்பத்தி திறனை அதிகரிக்க அலுவ லர்கள் மற்றும் பொறியாளர்கள் திட்டமிட வேண்டும். மேலும் திட்டப்பணிகளை விரிவுபடுத்துவதற்கும், ஆலையின் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் அரசிற்கு அறிக்கை சமர்ப்பித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்த பகுதியில் உள்ள கனிம நிறுவன கிராபைட் ஆலை அதிகஅளவு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் பணிகளை திட்டமிட வேண்டும் என்று அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின்போது உதவி பொது மேலாளர்கள் ஹென்றி ராபர்ட், சந்தானம், தொழிலக மேலாளர்கள் முத்து சுப்பிரமணியன், ஜெயசேகர், கனிமவள மேலாளர் ஹேமந்குமார் மற்றும் பலர் உடன் சென்றனர்.