உள்ளூர் செய்திகள்
கொல்லம்பாளையம் அரசு பள்ளியில் தடுப்பூசி போட்டுக் கொண்ட மாணவி.

ஈரோடு மாவட்டத்தில் இன்று 497 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம்

Published On 2022-01-29 12:10 IST   |   Update On 2022-01-29 12:10:00 IST
ஈரோடு மாவட்டத்தில் இன்று 497 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் இன்று 497 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 

மக்களிடம் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் என்ற பெயரில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டத்திலும் மாபெரும் தடுப்பூசி முகாம் மூலம் பல லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டு ள்ளனர். இந்நிலையில் இன்று 20&வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என 497 மையங்களில் காலை இந்த மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது. 

1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.

இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 1988 பணியாளர்கள், 66 வாகனங்கள் பயன் படுத்தப்பட்டு வருகிறது. 

இதேப்போல் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இதேபோல 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் இன்று முகாம்களில் போடப்பட்டு வருகிறது. இது போல் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கும் இன்றைய முகாமில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

Similar News