உள்ளூர் செய்திகள்
ஈரோடு பெரியமாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்த பக்தர்கள்.

கோவில்களில் சாமி தரிசனம் செய்த பொதுமக்கள்

Published On 2022-01-28 15:24 IST   |   Update On 2022-01-28 15:24:00 IST
வார இறுதி நாட்களில் வழிபட தடை நீக்கப்பட்டாதல் கோவில்களில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஈரோடு:

வார இறுதி நாட்களில் வழிபட தடை நீக்கப்பட்டாதல் கோவில்களில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதி கரித்து வந்ததால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை களில் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபட தடை விதித்து இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் அரசு பல்வேறு தளர்வுகள் அளித்து வருகிறது. இதே போல் வழிபாட்டு தலங்களுக்கு இறுதி நாட்களில் செல்ல விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டது.

வழக்கம் போல்  அனைத்து நாட் களிலும் பக்தர்கள் வழிகாட்டு வழிமுறைகளை கடை பிடித்து கோவில்களுக்கு செல்லலாம் என அரசு அறிவித்து உள்ளது.

இதையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சாமி தரிசனம் செய்தனர்.

சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் கோவிலில் இன்று அதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு  வந்து பண்ணாரியம்மனை வழி பட்டனர்.

சத்தியமங்கலம், மற்றும் சுற்று வட்டார பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் இன்று காலை அதிகளவில் வந்தி ருந்தினர். அவர்கள் கைகளை கழுவிய பிறகே சமூக இடைவெளியுடன் அனு மதிக்கப்பட்டனர்.

இதே போல் கோபி கொண்டத்து காளியம்மன், சாரதா மாரியம்மன், பச்ச மலை, பவளமலை முருகன் கோவில், அந்தியூர் பத்ரகாளியம்மன், குருநாத சாமி, கவுந்தப்பாடி மாரியம்மன் கோவில் பெருந்துறை ஈஸ்வரன் கோவில், சென்னிமலை முருகன், மொடக்குறிச்சி கரியகாளியம்மன், எழுமாத்தூர் கொங்காளியம்மன் கோவில், திண்டல் வேலாயுத சாமி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் இன்று காலை முதல் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு இன்று பக் தர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பொதுமக்கள் பலர் கூடுதுறையில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கொடுமுடி காவிரி ஆற்றில் பக்தர்கள் நீராடி மகு டேஸ்வரரை வழிபட்டு சென் றனர்.

ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், கோட்டை ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில், பத்ரகாளியம்மன், கருங்கல்பாளையம் மாரியம்மன், பார்க் ரோடு எல்லை மாரியம்மன், முருகன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் இன்று காலை ஏராளமான பக்தர்கள் வந்து வழி பட்டனர்.

Similar News