உள்ளூர் செய்திகள்
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் கண்காணிப்பு கேமிரா மூலம் பதிவு செய்யப்படும்

Published On 2022-01-28 15:09 IST   |   Update On 2022-01-28 15:09:00 IST
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் கண்காணிப்பு கேமிரா மூலம் பதிவு செய்யப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
ஈரோடு:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் கண்காணிப்பு கேமிரா மூலம் பதிவு செய்யப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர், மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது. 

இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

வேட்புமனு தாக்கல் செய்தல், வேட்பு மனுக்களை ஆய்வு செய்தல், வேட்பு மனுக்களை திரும்ப பெறுதல், சின்னங்களை ஒதுக்கீடு செய்தல் ஆகியவை கண்காணிப்பு கேமிரா மூலம் பதிவு செய்திட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகளில் தேர்தல் நடக்கிறது. இதில் மாநகராட்சி பகுதியில் 443 வாக்குச்சாவடி மையங்களிலும், 4 நகராட்சிகளில் 153 வாக்குச்சாவடி மையங்களிலும், 42 பேரூராட்சிகளில் 655 வாக்குச்சாவடி மையங் களிலும் என மொத்தம் 1251 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

19-ந்தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். கடைசி ஒரு மணி நேரம் அதாவது 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்குள்ளானவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைத்து பதவி இடங்களுக்கான தேர்தல்கள் கட்சி அடிப்படையில் நடைபெறும்.

மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குச் சாவடிகளில் சாய்வுதளம், சக்கர நாற்காலி மற்றும் துணையாள் ஆகியவை அமைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

மேலும் பதற்றம் நிறைந்தவாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடவடிக்கைகளை கண்காணிப்பு கேமிரா, நுண்பார்வையாளர்கள், இணையதளகாண் காணிப்பு ஆகியவற்றின் மூலம் கண்காணிக்கப்படவுள்ளது.

எனவே மக்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் வாக்களிக்க ஏதுவாகவும், வாக்குச் சாவடிகள் வாக்குப்பதிவு பொருட்களை பா துகாப்பாக எடுத்துச் செல்லவும், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறவும் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவிதேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News