உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 போலீசாருக்கு கொரோனா

Published On 2022-01-25 08:47 GMT   |   Update On 2022-01-25 08:47 GMT
கருங்கல்பாளையத்தில் பணியாற்றும் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 5 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு லேசான அறிகுறி என்பதால் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. காய்ச்சல், சளி, தலைவலி, உடல் சோர்வு போன்றவை அதிகமாக ஏற்படுகிறது. முன்கள பணியாளர்களான போலீசையையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.

ஏற்கனவே மாவட்டம் முழுவதும் 2 இன்ஸ்பெக்டர் உள்பட 30 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு லேசான அறிகுறியே இருந்ததால் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டனர்.

இந்நிலையில் கருங்கல்பாளையத்தில் பணியாற்றும் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 5 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு லேசான அறிகுறி என்பதால் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

தடுப்பு நடவடிக்கையாக கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பொதுமக்கள் போலீஸ் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. பொதுமக்கள் கொண்டு வரும் மனுக்கள் போலீஸ் நிலையத்திற்கு வெளியே இருந்து வாங்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News