உள்ளூர் செய்திகள்
சிறப்பு முகாமினை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்து பார்வையிட்ட காட்சி

கிராமப்புற மக்கள் மேம்படுத்தும் வகையில் பல திட்டங்களை முதல்வர் செயல்படுத்துகிறார்

Published On 2022-01-25 07:39 GMT   |   Update On 2022-01-25 07:39 GMT
கிராமப்புற மக்களை மேம்படுத்தும் வகையில் பல திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன் றியம், மேலப்பனையூரில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் மற்றும் ரூ.71.74 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகளை, கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர்  தெரிவித்ததாவது,

தமிழக முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் மற்றும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டமானது வட்டத்திற்கு 3 முகாம்கள் வீதம் மொத்தம் 39 முகாம்களில் 17 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இம்மருத்துவ முகாமினை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 
      
மேலப்பனையூரில், கால்நடை சாணம் மற்றும் காய்கறி கழிவுகளைக் கொண்டு ரூ.51.69 லட்சம் மதிப்பீட்டில் மின்சாரம் தயாரிக்கும் திட்டப்பணியின் வாயிலாக இக்கிராமத்திற்கு தேவையான மின்சாரம் கிடைக்கப்பெறும். இதன்படி இக்கிராமம் மின்தடையில்லா கிராமமாக மாறும். இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் மின்சாரத்தினை பயன்படுத்தி இப்பகுதி தெருவிளக்கு, நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றுதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும். இதன்மூலம்  தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புற மக்களை மேம்படுத்தும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Tags:    

Similar News