உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.500 அபராதம்
ஈரோட்டில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர்.
ஈரோடு:
ஈரோட்டில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர்.
ஈரோட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவை கட்டுப் படுத்தும் வகையில் பொது இடங்களில் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.
ஈரோடு மாவட்டத்தில் போலீசார், வருவாய்த்துறையினர் மாநகராட்சி பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஒன்றிணைந்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இருப்பினும் பலர் முக கவசம் அணியாமல் வந்தனர். இதையடுத்து முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க அரசு அறிவித்தது. ஈரோடு மாவட்டத்தில் ரூ.500&க்கான ரசீது புத்தகம் வராததால் போலீசார் அபராதம் விதிக்காமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில் ரூ.500&க்கான அபராத ரசீது புத்தகம் ஈரோடுக்கு வந்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையத்துக்கும் இந்த ரசீது புத்தகம் அனுப்பப்பட்டது.
இதையடுத்து இன்று முதல் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கும் பணி தொடங்கும் என போலீசார் தெரிவித்திருந்தனர்.
அதன்படி இன்று முதல் ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் வந்தவர் களுக்கு ரூ.500 அபராதம் விதித்து வருகின்றனர்.
மாநகர் பகுதியில் பன்னீர்செல்வம் பார்க், காளை மாடு சிலை, பஸ் நிலையம் அருகே என மக்கள் கூடும் இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு அபராதம் விதித்தனர்.
இதேப்போல் கோபி, பவானி, பெருந்துறை, அந்தியூர், சத்தியமங்கலம், கொடுமுடி மொடக்குறிச்சி என மாவட்டம் முழுவதும் போலீசார் முககவசம் அணியாமல் வந்த நபர்களிடம் ரூ.500 அபராதம் விதித்தனர்.