உள்ளூர் செய்திகள்
கம்மவான்பேட்டை காளைவிடும் விழாவில் முதல் காளையாக கோவில் மாட்டுக்கு பூஜை செய்து ஓடவிடப்பட்டது.

மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்

Published On 2022-01-24 09:49 GMT   |   Update On 2022-01-24 09:49 GMT
கம்மவான்பேட்டையில் மாடு விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது.
வேலூர்:

கம்மவான்பேட்டையில் இன்று நடந்த மாடு விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது.

வேலூர் அருகே உள்ள கம்மவான்பேட்டையில் இன்று காலை மாடு விடும் விழா நடந்தது.

முதல் காளையாக கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது. இதைத் தொடர்ந்து வாடிவாசலில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தடுப்புகள் வழியாக காளைகள் சீறிப் பாய்ந்து ஓடின. 

90-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடியது.  இந்த மாடு விடும் விழாவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 
வீட்டு மாடியில் நின்று கொண்டு காளைகள் ஓடியதை பார்த்து ரசித்தனர். சிறப்பாக ஓடிய காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Tags:    

Similar News