உள்ளூர் செய்திகள்
காட்பாடி ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகளை போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த காட்சி.

காட்பாடி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

Published On 2022-01-24 15:07 IST   |   Update On 2022-01-24 15:07:00 IST
குடியரசு தின பாதுகாப்பையொட்டி காட்பாடி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை செய்தனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 600 போலீசார் ஈடுபட உள்ளனர். 

குடியரசு தினத்தில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்கள், ரெயில், பஸ் நிலையங்கள், கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காட்பாடி ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. அனைத்து ரெயில்களில் போலீசார் சோதனை நடத்தினர்.

மேலும் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மெட்டல் டிடக்டர் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகள் கொண்டு வரும் உடமைகளையும் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.

தொடர்ந்து 3 நாட்கள் இந்த சோதனை நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.

Similar News