உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

ஈரோட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6,291 ஆக அதிகரிப்பு

Published On 2022-01-24 13:37 IST   |   Update On 2022-01-24 13:37:00 IST
ஈரோட்டில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஈரோட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
ஈரோடு:

ஈரோட்டில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஈரோட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. 

தற்போது மாவட்டத்தில் தினமும் 4 ஆயிரம் வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதிலும் தொற்று பரவலை கட்டுபடுத்த முடியவில்லை. 

இந்நிலையில் சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல் படி நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சமாக மேலும் 1220பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 154 கூடுதலாகும்.

இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர் களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 418 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 554 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். 

இதனால் இதுவரை மாவட் டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்து 406 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந் தவர்கள் எண்ணிக்கை 721 ஆக  உள்ளது.

தற்போது மாவட்டம் முழுவதும் 6,291 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று  வருகின்றனர்.  ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்ப டுத்தும் வகையில் மாவட்ட நிர்வா கம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

ஈரோடு மாவட் டத்தில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளில் படுக் கைகள் தயார் நிலையில் உள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் 1,574 ஆக்சிஜன் வசதி யுடன் கூடிய படுக்கைகள் உள்ளன. 

இதில் நேற்று காலை வரை 114 படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளன.  இதேபோல் ஆக்சிஜன் வசதி இல்லாத 849 படுக்கைகள் உள்ளன.  

இதில் தற்போது வரை 135 படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளன. ஐ.சி.யூ வார்டில் சிகிச்சை அளிப்பதற்காக 437 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.  இதில் 10 படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளன. 

மாவட்டம் முழுவதும் 2601 படுக்கைகள் காலியாகவே உள்ளது.தற்போது பெரும்பாலானோருக்கு லேசான அறிகுறியே இருப்பதால் அவர்கள்  வீட்டு தனிமையிலிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News