உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

பவானி கூடுதுறையில் புனித நீராட, பரிகாரம் செய்ய 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி

Published On 2022-01-24 13:20 IST   |   Update On 2022-01-24 13:20:00 IST
கொரோனா பரவல் காரணமாக பவானி கூடுதுறையில் புனித நீராட, பரிகாரம் செய்ய 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
பவானி:

கொரோனா பரவல் காரணமாக பவானி கூடுதுறையில் புனித நீராட, பரிகாரம் செய்ய 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு உள்பட தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.    இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது.   

இதே போல் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் வழிபாட்டு தலங்களில்  பக்தர் கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 23-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) வரை ஈரோடு மாவட்டத்தில் உள்ள  கோவில்கள் மற்றும் நீர்நிலைகளில் நீராட தடை விதிக்கப்பட்டு இருந்தன.

இதே போல் பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்ய 3 நாட்களுக்கு பிறகு இன்று முதல் அனுமதி அளிக்கப் பட்டது.

இதையொட்டி கொரோனா தடுப்பு விதிமுறை களுடன் இன்று (திங்கட்கிழமை) முதல் வரும்  27-ந் தேதி (வியாழக்கிழமை) வரை 4 நாட்கள் மட்டுமே பவானி கூடுதுறையில் பொதுமக்கள் புனித நீராட மற்றும் பரிகாரம், திதி கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் வரும் வெள்ளி, சனி ஞாயிற்றுக்கிழமை என 3 நாட்கள் மீண்டும் புனித நீராட அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டள்ளது.

இதனால் இன்று காலை முதல் பொதுமக்கள் பலர் வந்து தங்கள் முன் னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். 

இதையொட்டி ஆற்றுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன்  முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக் கப்பட்டனர்.

Similar News