உள்ளூர் செய்திகள்
அந்தியூர் அருகே என்ஜினீயரிங் பட்டதாரி தற்கொலை
அந்தியூர் அருகே வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மீனவர் மாரியம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (23)இவர் பிஇ பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் இவர் குடும்பத்தோடு தற்சமயம் அரசு பள்ளி அருகில் குடியிருந்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை அவரது அம்மாவிடம் இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கூறிவிட்டு தனது சொந்த வீடான மீனவர் மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரைமீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவர் உயிரிழந்தாக டாக்டர் தெரிவித்தார்.
இதுகுறித்து அந்தியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் விசாரணை நடத்தி வருகின்றார். இறந்த பார்த்திபனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
மேலும் அவருக்கு உடல் நிலை சிறிது நாட்களாக சரி இல்லை என்று கூறப்ப டுகிறது.