உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

ஈரோட்டில் காரில் ஆடு திருடிய வாலிபர்கள்

Published On 2022-01-24 12:32 IST   |   Update On 2022-01-24 12:32:00 IST
ஈரோட்டில் காரில் ஆடு திருடிய வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோட்டில் காரில் ஆடு திருடிய வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு ஒண்டிக்காரன்பாளையம், வில்லரசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 42).சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர் தனது வீட்டில் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். 
 
இந்நிலையில் அந்த ஆடுகள் வெள்ளக்கால்மேடு பகுதியில் நேற்று மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அந்த பகுதியில் கார் ஒன்று வந்து நின்றது. 

காரிலிருந்து 2 வாலிபர்கள் இறங்கி திடீரென ஆட்டை திருடிக் கொண்டு காரில் சென்றனர். இதனை அந்த வழியாக வந்த கோவிந்தசாமி உறவினர் ஒருவர் பார்த்து அவருக்கு  தகவல் தெரிவித்தார்.

பின்னர் கோவிந்தசாமி உறவினர்களுடன் ஆட்டை திருடிய நபர்களை தேடி சென்றார். அப்போது ஈரோடு ராசாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடை அருகே ஆடை திருடி சென்றவர்கள் கார் நின்றது. 

கோவிந்தசாமி மற்றும் உறவினர்கள் காரில் இருந்தவர்கள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது அவர்கள் சூளை பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா, திண்டல் நகரை சேர்ந்த சதீஸ் என கூறினர். அப்போது திடீரென அவர்கள் இருவரும் ஆட்டையும் காரையும் அங்கேயே விட்டுவிட்டு  தப்பி ஓடி சென்று விட்டனர்.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News