உள்ளூர் செய்திகள்
கைதான கொண்டப்பா.

சோளக்காட்டில் 135 கஞ்சாசெடி வளர்த்த விவசாயி கைது

Published On 2022-01-23 13:13 IST   |   Update On 2022-01-23 13:13:00 IST
ஆசனூர் பகுதியில் கஞ்சாசெடியை பயிரிட்டு வளர்த்த விவசாயி கைது செய்யபட்டார்.
தாளவாடி:

ஆசனூர் பகுதியில் கஞ்சாசெடியை பயிரிட்டு வளர்த்த விவசாயி கைது செய்யபட்டார்.

ஈரோடு மாவட்டம் கேர்மாளம் குருப் ஆசனூர் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் என்பவர் தழுதி கேர்மாளம் என்ற பகுதியில் ஒரு விவசாயி கஞ்சா பயிரிட்டு வளர்த்து வருவதாக தாளவாடி போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார்  சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.அப்போது கொண்டப்பா (40) என்ற விவசாயிக்கு சொந்தமான சோளக்காட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது சோள பயிருக்கு இடையே கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்தது தெரியவந்தது. கஞ்சா  செடிகள் 4 அடி வரை  வளர்ந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு இருந்த 135 கஞ்சா  செடிகளையும்  போலீசார் அகற்றினர்.

அந்த செடிகளில் இருந்து மொத்தம் 10அரை கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக  விவசாயி கொண்டப்பாவை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர் யாரிடம் இருந்து கஞ்சா விதைகளை வாங்கினார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News